Saturday, October 3, 2009


பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை-600 108. (பக்கம்: 188). 044 25267543

வரலாறு, அறிவியல், உடல் நலம், சினிமா என அனைத்து துறைகளைச் சேர்ந்த தகவல்களையும் தொகுத்து வழங்கி படிப்பவர்களை பரவசப் படுத்தியுள்ளார், நூலாசிரியர்.
மைக்ரோ சாப்டின் பில் கேட்ஸ் இந்திய இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில் ஏன் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்பதில் துவங்கி, ஆங்கிலேயர்களுக்கு சீனர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு வரை பல வித்தியாசமான தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன.
மர்லின் மன்றோ பற்றிய ஹாலிவுட் விஷயங்களுடன், பி.யூ.சின்னப்பா குறித்த கோலிவுட் விஷயங்களும் உள்ளன.
மன அழுத்தத்தை அறிவதற்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளும், இதயத்தை பற்றிய குட்டி சர்வேயும் மிகவும் பயன் உள்ளவை. எதிர்பாராதது புத்தகம், அனைத்து தரப்பினரும் படிக்கக் கூடியது

No comments:

Post a Comment