கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
Saturday, October 3, 2009
வெற்றி விதைகள் : ஆக் மாண்டினோ எழுதிய Mission Success ஆங்கில நாவல்.தமிழில்: சுப்ரஜா. வெளியீடு: வாதினி, 545, 14வது தெரு, 4வது செக்டார், கே.கே.நகர், சென்னை-78.
வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய இந்த புதினம் சுயமுன்னேற்ற வகையைச் சார்ந்தது. தமிழில் நிறைய கதைகள் எழுதியுள்ள ஆசிரியர், மொழிபெயர்ப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வரலாறு, அறிவியல், உடல் நலம், சினிமா என அனைத்து துறைகளைச் சேர்ந்த தகவல்களையும் தொகுத்து வழங்கி படிப்பவர்களை பரவசப் படுத்தியுள்ளார், நூலாசிரியர். மைக்ரோ சாப்டின் பில் கேட்ஸ் இந்திய இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில் ஏன் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்பதில் துவங்கி, ஆங்கிலேயர்களுக்கு சீனர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு வரை பல வித்தியாசமான தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. மர்லின் மன்றோ பற்றிய ஹாலிவுட் விஷயங்களுடன், பி.யூ.சின்னப்பா குறித்த கோலிவுட் விஷயங்களும் உள்ளன. மன அழுத்தத்தை அறிவதற்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளும், இதயத்தை பற்றிய குட்டி சர்வேயும் மிகவும் பயன் உள்ளவை. எதிர்பாராதது புத்தகம், அனைத்து தரப்பினரும் படிக்கக் கூடியது
"இந்தியாவில் விஞ்ஞானிகளுக்குச் சரியான அங்கீகாரம் இல்லாததால்' பலவிதமான விபரீதங்கள் நேர்கின்றன என்பதை மையமாக வைத்து "காக்க காக்க கனகவேல் காக்க,' "விபரீத ஆட்டம்' என்னும் இரு குறுநாவல்களை குடும்பப் பின்னணியில் திகிலூட்டும் வகையில், விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாவலாசிரியர். ஆங்கில வார்த்தைகளை சரளமாகப் புரளவிட்டு, சினிமா பாணியில் கதை முடிக்கப்பட்டுள்ளது. படித்து ரசிக்க.
Friday, October 2, 2009
வெளியீடு: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு (உஸ்மான் தெரு), த.பை. எண்: 1040, தியாகராயர் நகர், சென்னை - 600 017. போன்: 044-24313646, 24313647
தமிழின் சிறந்த சிறுகதை தொகுதி . இதன் விலை ரூபாய் இருபத்தி ஏழு மட்டும் .லா.ச .ராமாமிருதம் முன்னுரை எழுதிய ஒரே சிறுகதை தொகுதி : திருவரசு புத்தக நிலையம் , 13 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 13 தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017.